வெற்றி நடைபோடும் சாம்சங்

Report Print Raju Raju in நிறுவனம்

சாம்சங் குழுமம் தென் கொரியாவின் சியோலில் உள்ள சாம்சங் டவுனில் தன் தலைமையகத்தை கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமாகும்.

தென் கொரியாவில் இயங்கும் நிறுவனங்களிலேயே சாம்சங் தான் மிக பெரிய நிறுவனமாகும்.

சாம்சங் என்ற கொரிய வார்த்தையின் அர்த்தம் 'மூன்று விண்மீன்கள்' என்பதாகும்.

சர்வதேச அரங்கில் சாம்சங் குழுமம் பல வியாபாரங்களில் ஈடுபட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், சாம்சங் ஹெவி இன்டஸ்டிரீஸ், சான்சங் சீ & டீ, சாம் சங் லைப் இன்ஷுரன்ஸ் ஆகிய பல பிரிவில் சாம்சங் நிறுவனம் செயல்படுகிறது.

சாம்சங் எலக்ட்டாரானிக்ஸ் உலகின் மிக பெரிய மின்னணு நிறுவனமாக திகழ்கிறது.

தென் கொரியாவின் மொத்த ஏற்றுமதியில் சாம்சங்கின் பங்கு 20 சதவீதம் உள்ளது.

சாம்சங் குழுமத்தின் வருவாயானது, சில நாடுகளின் மொத்த ஜி.டி.பி யை காட்டிலும் அதிகமாக உள்ளது. Lee Kun Hee என்பவர் சாம் சங் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்து வருகிறார்.

இதில் எல்லா மக்களுக்கும் அதிகம் பரிட்சியமான சாம்சங் எலக்டிரானிக்ஸ் பிரிவு 1969 இல் தொடங்கப்பட்டது.

கைபேசி, எல் சி டி, எல் இ டி, தொலைகாட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்கள் விற்பனையில் சாம் சங் முன்னனி வகிக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் கூட சாம்சங் பிட்னஸ் ஸ்மார்ட் வாட்ச் யை அறிமுகபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் சாம்சங் தற்போது 6 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments