அமேசானின் புதிய முயற்சி: அதிர்ச்சியில் ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்திய அளவில் ஒன்லைன் ஊடாக உணவு டெலிவரி செய்யும் சேவையில் ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ என்பன ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன.

இப்படியிருக்கையில் மின் வர்த்தக சேவையினை வழங்கிவரும் அமேஷான் நிறுவனமும் இந்தியாவில் ஒன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவையில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேஷான் நிறுவனம் நீண்ட காலமாக உலகள அளவில் மின் வர்த்தக சேவையில் ஈடுபடுவதனால் பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவிற்கு என தனியான சேவையினையும் வழங்கிவருகின்றது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒன்லைன் உணவு டெலிவரி சேவையினை அறிமுகம் செய்யவுள்ளமை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ஊபர் நிறுவனமும் ஒன்லைன் உணவு டெலிவரி சேவையினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers