3 பில்லியன் யூரோ செலவில் கூகுளின் அபார திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இணைய உலகினை ஆக்கிரமித்து வரும் கூகுள் நிறுவனமானது 3 பில்லியன் யூரோ செலவில் புதிய திட்டம் ஒன்றினை தீட்டியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2 வருடங்களில் ஐரோப்பியாவிற்கான டேட்டா சென்டரினை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை கடந்த வாரம் கூகுளின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டிருந்தார்.

இதன்போது கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இணைய உட்கட்டமைப்பிற்காக கூகுள் 15 பில்லியன் யூரோக்களை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய விரிவாக்கல் திட்டதின் அடிப்படையில் சுமார் 13,000 முழு நேர பணி வெற்றிடங்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் மீள உருவாக்கப்படக்கூடிய மின் சக்தியிலும் கூகுள் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers