ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் தனது ஆப்பிள் ஸ்டோர்களை தற்காலிகமாக மூடியிருந்தது.

இந்நிலையில் சில நாடுகளில் உள்ள ஸ்டோர்களை மீளவும் திறக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஏப்ரல் மாத நடுப்பகுதிக்கு முன்னர் குறித்த ஸ்டோர்களை மீளவும் திறக்கவுள்ளதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அனேகமான பணியாளர்கள் வீட்டிலிருந்தவாறே பணியாற்றுகின்றனர்.

இதனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஆப்பிள் நீடித்துள்ளது.

எனினும் இந்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக ராய்ட்டர் செய்தி சேவை ஆப்பிள் நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...