பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அதிரடி காட்டிய செஹான் ஜயசூரிய..! இலங்கை வெற்றி

Report Print Vino in கிரிக்கெட்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஏ லயன்ஸ் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை 2 போட்டிகள் மீதமிருக்க கைப்பற்றியுள்ளது.

3 வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் இங்கிலாந்து அணி ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த நிலையில் 185 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்களில் 6 விக்கட்டுகளை மட்டுமே இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

குறித்த ஆட்டத்தில் பந்து வீச்சில் கலக்கிய ஜயசூரிய 83 ஓட்டங்களை 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக பெற்றுக்கொடுத்தார். அத்துடன் விதானகே 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் லிவிங்ஸ்டன் மற்றும் ரெய்னர் தலா இரண்டு விக்கட்களை கைப்பற்றி இருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி 3-0 என தொடரை 2 போட்டிகள் மீதமிருக்க கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments