இதே வாய் தான் அப்போ வேண்டாம் என்று சொன்னது: இப்போ மட்டும் வேணுமா என கோஹ்லி கேள்வி

Report Print Santhan in கிரிக்கெட்
523Shares
523Shares
ibctamil.com

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி ரகானேவை வேணாம் என்று சொன்ன வாய்கள் இன்று ஏன் அவரை சேர்க்கவில்லை என்று கேள்வி கேட்பதாக கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஏன் ரகானேவை சேர்க்கவில்லை என்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, மக்களின் மனநிலை எப்படி மாறுகிறது என்றே புரியவில்லை, இதை பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

இது மட்டுமா, இன்னும் என்ன என்ன கேள்விகளை நான் கேட்க வேண்டுமோ என்று தெரியவில்லை.

ஒரு அணிக்கு சரியான தெரிவு தான் மிகவும் முக்கியம். ரகானேவைவிட ரோகித் தற்போது நல்ல பார்மில் உள்ளதால் தான் அவரை தெரிவு செய்தோம்.

ரகானேவை வேணாம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அவரை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி கேட்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்