சென்னை எனது இரண்டாவது வீடு: டோனி உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை எனக்கு இரண்டாவது வீடு என்று உருக்கத்துடன் பேசியுள்ளார் மகேந்திர சிங் டோனி.

ஐபிஎல்யில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தடைக்காலம் முடிந்து இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க உள்ளது.

இம்முறையும், சென்னை அணிக்கு டோனியே தலைவராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

ந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திருப்பம் குறித்தும், அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டோனி பேசினார்.

அப்போது கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், நமது ஆதரவாளர்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றனர்.

இதுவே சென்னை அணியின் பலம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இம்முறை 18 முதல் 20 வீரர்கள் வரை சென்னை அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக உள்ளது, சென்னை எனக்கு இரண்டாவது வீடு ஆகும். சென்னை எப்போதுமே எனக்கு தனிச்சிறப்பு உடையது தான்.

ஏனெனில், இங்கு தான் டெஸ்ட் போட்டியில் அதிக ஒட்டங்களை பதிவு செய்தேன். சென்னை அணியின் சிறப்பு என்னவென்றால், அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் CSK-வில் இருப்பதே ஆகும்.

ஏற்றம், இறக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும் கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.

சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை சிறப்பாக மாற்றியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்