அறிமுக டெஸ்டில் 130 ஓட்டங்களில் சுருண்ட அயர்லாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்
104Shares
104Shares
ibctamil.com

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முறையாக களம் இறங்கிய அயர்லாந்து அணி, பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 130 ஓட்டங்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது அறிமுக டெஸ்டில் விளையாட முடிவு செய்தது.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டப்ளினில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அஸ்ரப் 83 ஓட்டங்களும், அசாத் சாபிஃக் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 130 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக கெவின் ஓ’பிரைன் 40 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் 4 விக்கெட்டுகளும், ஷாதப் கான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் அயர்லாந்து பாலோ-ஆன் ஆனது. பின்னர், பாகிஸ்தான் அணி பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

இந்நிலையில், இன்று 4வது நாள் ஆட்டத்தில் ஆடி வரும் அயர்லாந்து தற்போது 4 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

PAUL FAITH/AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்