டோனி ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வா?

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற வாய்ப்புள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி, அசத்தலாக விளையாடி வருகிறது.

இந்த அணியில் 30 வயதிற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளதால், எப்படி இந்த அணி ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றும் என்று கிண்டல் செய்தவர்களுக்கு, தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் சென்னை அணி வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் தலைவரான டோனி, தற்போது அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அவர்களின் உடல் தகுதி எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய வேண்டியுள்ளது.

அப்போது இவர்கள் தற்போது போன்றே விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான், அவர்கள் அணியில் இருப்பது கடினம் தான், அது ஏன் நான் கூடத் தான் என்று டோனி சூசகமாக கூறியுள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் டோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்