பந்தை சேதப்படுத்திய விவகாரம் முதல் தரவரிசையில் சரிவு வரை மோசமான அவுஸ்திரேலிய அணி: ஹேசில்வுட் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

சாம்பியன் அணியாக இருந்த அவுஸ்திரேலியா சமீபகாலமாக கடுமையான தோல்வி, விமர்சனங்களை சந்தித்து வருவது ஏன்? என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விளக்கமளித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணி சமீபகாலமாக இறங்கு முகத்துடன் உள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் அந்த அணி வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் தான் என, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ’தென் ஆப்பிரிக்க தொடர் பெரிய கிரிக்கெட் தொடராகும். அதுவும் ஆஷஸ் தொடருக்கு பிறகு வருகிறது. அனைத்து பெரிய தொடர்களும் மன அழுத்தத்தைக் கொடுப்பவை.

இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற அழுத்தத்தை நாங்களே எங்கள் மீது சுமத்திக் கொள்கிறோம். எங்களது திறமையை அளவிடுவது வெறும் வெற்றி மட்டுமே என்பதால் தான், களத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.

இப்போது நிலை கொஞ்சம் மாறியுள்ளது. ஜஸ்டின் லாங்கர், களத்துக்கு வெளியே நாங்கள் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது குறித்து நிறைய பேசினார்.

நாங்கள் Ball Tampering விவகாரத்தின்போது இரவு படுக்க சென்றோம். காலையில் எழுந்து பார்த்தால் இது மிகப்பெரிய சர்ச்சையானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இதற்கான் எதிர்வினை மிகப்பெரியது.

எங்களுக்கு அச்சமூட்டக்கூடியவையாக இருந்தது. பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து நேரடியாக கிரிக்கெட் களம் மற்றபடி வெளி உலகம் என்னவென்று தெரியாமல் வளர்ந்து விட்டோம்.

கிரிக்கெட் மட்டுமே தெரிந்த ஒன்று என்பது எப்போது நல்லதல்ல. அதனால்தான் இந்தத துயரம் ஏற்பட்டது. இப்போது மாறி வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers