புஜாராவின் ரன் அவுட்டாக்கிற்கு காரணமான கோஹ்லி! இந்திய அணியை ஆட்டம் காண வைத்த இங்கிலாந்து

Report Print Santhan in கிரிக்கெட்
376Shares
376Shares
ibctamil.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தேவையில்லாம புஜாராவை ரன் ஓட அழைத்து அவரை கடைசியில் ரன் அவுட்டாக்கிவிட்டார் என்றே கூறலாம்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் மழையால் பாதிக்க, இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி இந்திய அணியில் கோஹ்லி(23), அஸ்வின்(29) தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இறுதியாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்கள் எடுத்தது.

இப்படி இந்திய அணியை ஆட்டம் காண வைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வீடியோவைக் காண கிளிக் செய்யவும்...

இப்போட்டியில் புஜாராவின் ரன் அவுட் தான் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்தது. கோஹ்லி மற்றும் புஜாரா நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்தனர்.

அதிலும் புஜாரா ஓட்டம் எதுவுமே அடிக்காமல் ஒரு டிராவிட் போல பந்துகளை மட்டுமே கடத்திக் கொண்டிருந்தார்.

அப்படி இருக்கையில் இன்னிங்ஸின் 9-வது ஓவரை ஆண்டர்சன் வீச புஜாரா அதை தடுத்து ஆட, உடனே கோஹ்லி ஓட்டம் எடுக்க வருமாறு அழைத்துவிட்டு, அதன் பின் திடீரென்று மீண்டும் கிரீசுக்கே சென்றுவிட்டார்.

இதனால் புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெளலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்