காயத்துடன் இருக்கும் கோஹ்லி மிகவும் அபாயகரமானவர்! எச்சரிக்கும் இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

காயத்தால் அவதிப்பட்டு வரும் கோஹ்லி, மிகவும் அபாயகரமானவர் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் தலைவரான கோஹ்லி பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் வலி இருந்ததால் களம் இறங்கவில்லை எனக் கூறப்பட்டது.

போட்டி முடிந்த பின்பு கோஹ்லி தான் முதுகு வலியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார். இருப்பினும் கோஹ்லி 50 சதவிகித உடற்தகுதியுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான பெய்லிஸ், காயத்தோடு விளையாடினாலும் கோஹ்லி அபாயகரமானவர் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தப்போவதில்லை. காயம் இருந்தாலும் அபாயகரமான வீரராக இருக்க முடியும். கிரிக்கெட் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், காயத்தோடு விளையாடி அதிக அளவில் ஓட்டங்களும், விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து நாங்கள் பெரிய அளவில் யோசிக்கவில்லை. ஆனால், ஸ்லிப் திசையில் அவரது விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்