இலங்கை வீரருக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம்! பேட்டிங் ஸ்டைலை மாற்றி சாதித்து காட்டுவேன் என நம்பிக்கை

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் இளம் வீரரான டிக்வெல்லா தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்ற முடிவு எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் சற்று வித்தியாசமான துடுப்பாட்டத்தைக் கொண்டவர் விக்கெட் கீப்பர் நிரோசன் டிக்வெல்லா. இவர் பந்தை அடிக்கும் விதம் வேடிக்கையாக இருக்கும்.

இந்த வேடிக்கையான ஆட்டம் அவருக்கு அதிக ஓட்டங்கள் குவிப்பதற்கு சாதகமாக இருந்த போதும், அதே சமயம் அந்த வேடிக்கையான துடுப்பாட்டமே அவருக்கு பாதகமான முடிவுகளை கொடுத்துள்ளது.

இலங்கை அணியில் உள்ளே நுழைந்தவுடன் சிறப்பான ஓட்டங்களை குவித்த இவர், அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக இவரின் துடுப்பாட்டம், இலங்கை அணிக்கு அந்தளவிற்கு உதவவில்லை.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவரின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை. உள்ளூர் தொடரான SLC T-20 லீக்கிலும் அதேநிலை தான் தொடர்ந்தது.

இதனால் இவர் ஆசிக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெறவில்லை. ஆனால் அவருடைய அதிர்ஷ்டமாக தினேஷ் சந்திமால் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேற இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இவர் இந்த தொடரில் எப்படியாவது சாதித்து தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளார்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எனது துடுப்பாட்ட யுத்திகள் மற்றும் திட்டங்களை மாற்றியிருந்தேன்.

அதில் சில மாற்றங்கள் எனது துடுப்பாட்டத்துக்கு பொருந்தியிருந்த போதும், சில மாற்றங்கள் பொருந்தவில்லை.

சாதாரணமாக வேடிக்கையான முறையில் துடுப்பெடுத்தாடி நான் ஆட்டமிழந்திருக்கிறேன். அது தொடர்பில் பலரும் பேசியிருக்கின்றனர். அது உண்மைதான். ஆனால் அதே வேடிக்கையான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்களையும் குவித்திருக்கிறேன்.

கடந்த காலங்களில் அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட்டை இழந்தேன். இப்போது நான் பொறுமையாக துடுப்பெடுத்தாட வேண்டும் என நினைக்கிறேன்.

நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் போதுதான், எனது துடுப்பாட்டத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர ஆகியோர், எனது துடுப்பாட்டத்தை அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினர்.

அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு உதவியது. ஆனால், டி20 போட்டிகளில் உளவியல் ரீதியில் நான் மேம்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers