அணித்தேர்வு பற்றியெல்லாம் கவலையில்லை.. எனக்கு கிரிக்கெட் தான் முக்கியம்: தமிழக வீரர் அஸ்வின்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனக்கு கிரிக்கெட் ஆட்டம் தான் முக்கியம் என்றும், அணித்தேர்வு பற்றி கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் அஸ்வின் பந்தை ஒவ்வொரு விதமாக வீசுவதிலும், பந்தின் விதவிதமான கோணங்களில், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கேரம் பந்து என பல வித்தைகளை வைத்துள்ளார்.

ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியில் தற்போது அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

நேற்று நடந்த 4வது போட்டியில், இந்திய அணி 358 ஓட்டங்கள் குவித்தும் பந்துவீச்சில் சொதப்பியதால் படுதோல்வியடைந்தது. இதனால் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

AP

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்காக பேசிய அஸ்வின் கூறுகையில், ‘நான் அணித்தேர்வு பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் வீரராக மேம்படுவது அவசியம். நாம் மேம்பட்டிருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதைத் தவிர வேறு எதைப்பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. கிங்ஸ் லெவன் அணியில் முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி இருப்பது எனக்கு உற்சாகமூட்டுகிறது. முருகன் அஸ்வின் பந்துவீச்சை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன்.

டி.என்.சி.ஏ.வில் என் லீக் அணிக்கும் அவர் ஆடுகிறார். வருண் டி.என்.பி.எல் டி20யில் அருமையாகச் செயல்பட்டதையும் அறிவேன். வருண் சக்ரவர்த்தியிடமிருந்து சில விடயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஐ.பி.எல் ஒரு பெரிய வாய்ப்பு, அதை மகிழ்ச்சியுடன் ஆடி அதில் நான் பிரமாதமாக வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers