ரோகித் சர்மாவை நெகிழ வைத்த தவான் மகன்.. ஷிகர் வெளியிட்ட வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய வீரர் தவானின் 5 வயது மகன் தனது பதிலால் ரோகித் சர்மாவை நெகிழ வைத்துள்ளார்.

2019 ஐசிசி உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. நாளை மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதுவரை, உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இந்தியாவை ஒரு முறை கூட வென்றதில்லை. இந்தியா 6 முறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காயம் காரணமாக நட்சத்திர வீரர் தவான் விலகியுள்ளார். ஊடகவியாளர் கௌரவ் கபூர், ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் தவானின் ஐந்து வயத மகன் சோரவர் தவான் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தியுள்ளார்.

இதன் போது, சோரவர் தவானிடம், யார் சிறந்த துடுப்பாட்டகாரர், நீங்களா? இல்லை உங்களது தந்தை தவானா? என ஊடகவியாளர் கௌரவ் கபூர் கேள்வி கேட்டார். ஆனால், சோரவர் அருகிலிருந்த ரோகித்தை கை காட்டினார்

சோரவர் பதிலால் நெகிழ்ந்து போன ரோகித் சோரவரிடம் கை தட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். இந்நிகழ்வை, ஷிகர் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers