இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்தை புகழ்ந்து தள்ளிய இலங்கை அணி வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை அரையுறுதியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்தை இலங்கை முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்துக்கு இலங்கை முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அர்னால்டின் டுவிட்டர் பதிவில், சிறப்பான பவுலிங் மற்றும் பீல்டிங்கை கொண்ட அணி இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

என்ன ஒரு அருமையான போட்டி! நியூசிலாந்து அணி எல்லாவற்றுக்கும் போராடுகிறார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்