விசித்திரமான முறையில் பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வின்.. இணையத்தை கலக்கும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

தமிழக அளவில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான்காவது சீசன் போட்டிகள் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்று தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சிவீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நேற்றைய தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் திண்டுக்கல் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் அணி பந்துவீச்சின் போது கடைசி 2 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதன் போது, அஸ்வின் வித்தியாசமாக பந்தை வீசினார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதே போன்று கடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் விளையாடிய அஸ்வின், ராஜஸ்தான் வீரர் பட்லரை மான்காட் முறையில் அவுட் செய்து வைரலானார் என்பது நினைவுக் கூரதக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...