இந்திய டி20 அணியிலும் இந்த தமிழக வீரருக்கு இடம் கிடையாது... தேர்வுக் குழு தலைவர் திட்டவட்ட முடிவு?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக்கிற்கு இனி டி 20 போட்டியிலும் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று தேர்வு குழு தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டோனி வந்த பின்பு, தினேஷ் கார்த்திக் என்ற ஒரு விக்கெட் கீப்பர் இருந்த இடமே தெரியாமல் போனது, அதன் பின் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், அவருக்கு அவ்வபோது இந்திய அணியில் இடம் கிடைத்து வந்தது.

குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதனால் அவருக்கு டி20 அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தது. அதன் பின் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் தனக்கு கொடுத்த சில வாய்ப்புகளையும் தினேஷ் பயன்படுத்த தவறியதால், அவரை இந்திய தேர்வு குழு ஒருநாள் அணியில் இனி அவருக்கு வாய்ப்பு தர போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து தற்போது வெளியான மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடர்களில் அவரின் பெயர் இடம் பெறவில்லை, குறிப்பாக டி20 அணியிலாவது இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை.

மேலும் தினேஷ் கார்த்திக்கிற்கு கொடுத்த வாய்ப்பு எல்லாம் போதும், ரிஷப்பாண்டை கொண்டு வரலாம் என்று தேர்வு குழு தலைவர் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers