இந்திய கிரிக்கெட் அணியில் பிளவா? சந்தேகத்தை கிளப்பும் புகைப்படங்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்
216Shares

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோஹ்லிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியதில் இருந்து, விராட் கோஹ்லி-ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

ஆனால், ரோஹித் ஷர்மாவுடன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை கோஹ்லி பதிவிட்டார். அதில் ரோஹித் ஷர்மா இல்லாததை குறிப்பிட்டு, பலரும் கேள்வி எழுப்பினர்.

அவருடனான கருத்து வேறுபாட்டால் தான் கோஹ்லி புகைப்படம் எடுப்பதை தவிர்த்து வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விராட் கோஹ்லி சக வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதிலும் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை என்பதால் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எனவே இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்