கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்களுக்கு அப்போதே பதிலடி கொடுத்த வார்னர்... வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் கெட்ட வார்த்தையில் திட்டிய நிலையில், அவர்களுக்கு வார்னர் வித்தியாசமாக பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளி தல ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளதால், சமநிலையில் இருந்தன.

இதனால் கடந்த 4-ஆம் திகதி துவங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்தணிக்கே இந்த முறை ஆஷஸ் கோப்பை கிடைக்க வாய்ப்புள்ளதாக முன்னணி வீரர்கள் பலரும் கூறினர்.

அந்த வகையில் அவுஸ்திரேலியா அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த நான்காவது போட்டியின் போது இடைவெளிக்கு பிறகு அவுஸ்திரேலியா வீரர்கள் தங்களுடைய அறையில் இருந்து மைதானத்திற்குள் செல்ல கீழே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் கெட்ட வார்த்தையில் ஏமாற்றுக்காரன்(Cheater)என்று கத்தினர். உடனே வார்னர் இதற்கு வார்னர் கோபப்படாமல், உற்சாகமாக இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டினார்.

அவரை கோபப்பட வைக்கலாம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் திட்டம் தீட்டியதை, மூக்குடைக்கும் வகையில் வார்னர் செய்துவிட்டதாக, அவுஸ்திரேலியா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்