இலங்கை நடுவர் தர்மசேனாவுக்கு கோடிக்கணக்கில் சம்பளம்... ஆண்டிற்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
1227Shares

இலங்கையைச் சேர்ந்த தர்மசேனாவே கிரிக்கெட் நடுவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நபராக இருக்கிறார்.

உலகில் இருக்கும் விளையாட்டுகளில் கால்பந்திற்கு அடுத்தபடியாக அதிகம் ரசிகர்கள் என்றால், அது கிரிக்கெட்டிற்கு தான், குறிப்பாக இந்தியா, இலங்கை, வங்கதேசம், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை ஒரு வெறியுடன் பார்த்து வருகின்றனர்.

இதில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதை தொடர்ந்து வெளிநாடுகளில் நடக்கும் உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

அப்படி கிரிக்கெட் வீரர்களே இப்படி கோடியில் புரளும் நிலையில், கிரிக்கெட்டிற்கு நடுவராக நிற்கும் அதாவது ICC Elite Panel Umpires நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற டாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.

கிறிஸ் கப்பென்னி

நியூசிலாந்தின் Dunedin-ஐ சேர்ந்தவர் Chris Gaffaney. இவர் Otago அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் தேசிய அணிக்காக விளையாடவில்லை.

இருப்பினும் இவர் அற்புதமான துடுப்பாட்ட வீரர். கடந்த 2007-ஆம் ஆண்டு லிஸ்ட் A அணியில் விளையாடியுள்ளார். குறுகிய காலத்திலே நடுவராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் தன்னுடைய 2014-ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக நின்றார். அதன் பின் தற்போது ஒருநாள், டெஸ்ட் போட்டி, டி20 என நடுவராக இருந்து வருகிறார்.

இவருக்கு நடுவராக சம்பளம் மட்டும் ஆண்டுக்கு (2018-19) 66,600 டொலர்(இலங்கை மதிப்பில் 1,20,20,634 கோடி ரூபாய்) தரப்படுகிறது.

மாரைஸ் எராஸ்மஸ்

55 வயதான இவர் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர். இவர் முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர். 53 முதல் தர போட்டிகளில், 131 விக்கெட்டுகள், 1,913 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இவர் கடந்த 2002/2003 காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் முதல் தர போட்டியில் நடுவரானார் . அதன் பின் 2006-ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு நடுவராகும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஆண்டிற்கு(2018-19) 68,000 டொலர்(இலங்கை மதிப்பில் 1,22,73,320 கோடி ரூபாய் ) சம்பாதிக்கிறார்.

ரிச்சர்ட் கேட்டில்போராக்

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Richard Kettleborough. இவர் Yorkshire மற்றும் Middlesex அணிக்காக விளையாடியுள்ளார். 33 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள இவர் 1258 ஓட்டங்களும், லிஸ்ட் A கிரிக்கெட்டில் 2900 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ஓய்வை அறிவித்த இவர் அதன் பின் 2002-ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் நடுவரானார். இவர் தன்னுடைய 2010-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் நடுவரானார். அதன் பின் 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் நடுவராக இருந்தார்.

இந்நிலையில் இவரின் ஆண்டு(2018-19) வருமானம் ஆண்டிற்கு 68,800 டொலர் (1,24,17,712 கோடி ரூபாய்) சம்பாதிக்கிறார்.

அலீம் டார்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் Aleem Dar. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் சர்வதேச நடுவராக பொறுப்பேற்றார். இதையடுத்து இவர் (2018-19) ஆண்டுகளில் 74,600 டொலர் (1,34,64,554 கோடி ரூபாய்) சம்பாதிக்கிறார்.

குமார் தர்மசேனா

இலங்கையைச் சேர்ந்தவர் குமார் தர்மசேனா. இலங்கை அணியின் முன்னாள் வீரரான இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 868 ஓட்டங்களும், 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதே போன்று 141 ஒருநாள் போட்டிகளில் 1222 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வுக்கு பின் கிரிக்கெட்டில் நடுவராக முடிவு செய்த இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச நடுவராக ஆனார். மேலும், அதிக டி 20 போட்டிகளில் நடுவராக நின்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நடுவர்களிலே இவர் தான் அதிகம் சம்பளம் வாங்குவதாகவும், கடந்த (2018-19)-களில் 76,200(இலங்கை மதிப்பில்1,37,53,338 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்