மீண்டும் பரபரப்பான சூப்பர் ஓவரில் மோதிய நியூசிலாந்து-இங்கிலாந்து.. சொந்த மண்ணில் தொடரை இழந்தது கிவீஸ்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டியில் சூப்பர் ஒவரில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

நான்கு டி-20 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2 போட்டியில் வெற்றிப்பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நவம்பர் 10ம் திகதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

மழை காரணமாக 11 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பொடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்ப துடுப்பாட்டகாரர்களான குப்தில்-முன்ரோ ஜோடியின் அதிரடியால் 11 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் குவித்தது.

குப்தில் 20 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 50 ஓட்டங்கள் குவித்தார். முன்ரோ 21 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 46 ஓட்டங்கள் சேர்த்தார்.

11 ஓவரில் 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, பேரிஸ்டோவின் அதிரடியால் வெற்றி இலக்கை சமன் செய்தது. 11 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணியும் 146 ஓட்டங்கள் குவித்தது. பேரிஸ்டோவ் 18 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 47 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து, உலகக் கோப்பையை போல் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் மோதினர். முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்தது.

icc

1 ஓவரில் 18 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணி, 1 விக்கெட் இழந்து 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers