சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி.! கடைசியில் பட்டையை கிளப்பிய ரோஹித்... நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியது இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

முன்னதாக முடிந்த இரண்டு டி-20 போட்டியிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என முன்னிலைப்பெற்றது. இதனால், நியூசிலாந்துக்கு 3வது டி-20 போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டி நெருக்கடி நிலை ஏற்பட்டது.

ஹாமில்டனில் நடைபெற்ற 3வது டி-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 65 ஓட்டங்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

180 ஓட்டங்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, வில்லியம்சன் அதிரடியால் வெற்றியை நோக்கி சென்றது.

எனினும், வெற்றிக்கு கடைசி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர் ஷமி வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் போல்டானார்.

போட்டி சமனில் முடிந்த நிலையில் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் மோதினர். நியூசிலாந்து தரப்பில் அணித்தலைவர் வில்லியம்சன், கப்டில் களமிங்கினர். இந்திய வீரர் பும்ரா பந்து வீசினார்.

6 பந்தில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி என நியூசிலாந்து அணி 17 ஓட்டங்கள் குவித்தது. 6 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் ரோஹித்-ராகுல் களமிறங்கினர்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர் சவுத்தி வீசிய முதல் பந்தில் ரோஹித் 2 ஓட்டங்கள் எடுத்தார், 2வது பந்தில் 1 ஓட்டம் எடுத்தார். 3வது பந்தில் ராகுல் பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் 1 ஓட்டம் அடித்தார்.

கடைசி 2 பந்தில் இந்திய அணி வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி பட்டையை கிளப்பினார்.

3வது டி-20 போட்டியில் சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற வெற்றிக்கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை ரோஹித் சர்மா தட்டிச்சென்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers