ஆம்... சச்சினுக்கு நான் தவறாக அவுட் கொடுத்தேன்! பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை ஒப்புக்கொண்ட நடுவர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் பலமுறை நடுவர்களின் தவறான முடிவால் பெளலியன் திரும்பியிருக்கும் நிலையில், முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர் நான் சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா எதிராக காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி பந்தில், பக்னர் சச்சினுக்கு எம்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார்.

ஆனால் அது அவுட் இல்லை என்பது தொலைக்காட்சி ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தது.

அதுமட்டுமின்றி, கடந்த 2005 ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் நடந்த அப்துல் ரசாக் வீசிய பந்து சச்சினின் பேட்டில் பந்து படாமல் சென்றது. ஆனால் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். இது அப்போது பெரும் சர்ச்சை ஆனது.

இதைப் பற்றி தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர், ஸ்டீவ் பக்னர் மேசன் அண்டு கெஸ்ட் ரேடியோ நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதில், சச்சினுக்கு இரண்டு தருணத்தில் நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்த ஒரு நடுவரும் தெரிந்தே தவறான முடிவு வழங்க விரும்புவதில்லை.

ஆனால் மனிதர்கள் தவறு செய்வது சகஜம். ஒரு முறை அவுஸ்திரேலியாவில் பந்து விக்கெட்டுக்கு மேலே சென்றது. இரண்டாவது முறை ஈடன் கார்டனில். பந்து சச்சினின் பேட்டில் படவில்லை.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்து ஆடும் போது உங்களுக்கு ஒன்றுமே கேட்காது. ஏன் என்றால் 1 லட்சம் ரசிகர்கள் கோஷமிடுவார்கள்.

தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதுமே மனித வாழ்வின் ஒரு பகுதிதான். இது நடுவரின் தன்னம்பிக்கைக்குப் பாதகமாக இருக்குமா எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடுவரின் திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்