2011 உலகக் கோப்பை சூதாட்ட விசாரணை தொடர்பில் இலங்கை பொலிஸ் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த இலங்கை பொலிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையை ஆதாரங்கள் இல்லாததால் கைவிடுவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி தேர்வு மற்றும் மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பினோம். வீரர்கள் மற்றும் தலைமை தேர்வாளர்களின் விளக்கத்தில் நாங்கள் திருப்தி அடைந்தோம்.

விசாரணை இப்போது கைவிடப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் வாக்குமூலம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்