டோனி இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் விளையாடி விட்டார்: முன்னாள் வீரர் தகவல்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி, கடந்த உலக கிண்ணம் தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் களமிறங்கவில்லை.

இதனால், அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழும் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் டோனியின் தலைமையின் கீழ் விளையாடியவருமான ஆஷிஸ் நெஹ்ரா,

இந்திய அணிக்காக டோனி இனி விளையாட மாட்டார் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

வரும் ஐபிஎல் போட்டியில் டோனி விளையாடுவதற்கும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன் என்றார் ஆஷிஸ் நெஹ்ரா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்