இலங்கையில் இருந்து வந்த வீரருக்கு மும்பையில் எவ்வளவு ரசிகர்கள்! லசித் மலிங்காவை புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
306Shares

ஐபிஎல் உட்பட அணி உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மலிங்கா ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர் குறித்து இந்திய அணி வீரர் சூர்யா குமார் யாதவ் வியந்துள்ளார்.

ஐபிஎல் உட்பட அணி உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடிய மலிங்கா மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.

அவர் குறித்து இந்திய அணி வீரர் சூர்யா குமார் யாதவ் டுவிட்டரில், மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளை நினைத்து பார்க்கிறேன்.

அங்கு வரும் ரசிகர்கள் பலர் மலிங்கா போலவே தலைமுடியை கொண்ட நீல நிற விக்கை அணிந்திருப்பார்கள்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரர் மும்பையின் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைக் பிடித்துள்ளார்.

ஜாம்பவான் மலிங்கா ஓய்வு பெறுகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்