உடல் அரிப்பு.. உடல் வலி எந்த நோயின் அறிகுறிகள் தெரியுமா?

Report Print Printha in நோய்
755Shares
755Shares
lankasrimarket.com

காற்று, தண்ணீர், கொசுக்கள் போன்றவை மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.

இவ்வாறு பரவும் வைரஸ்கள் நம் உடலுக்குள் சென்றதும் 3 முதல் 7 நாட்களுக்குள், அதன் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.

வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்?
  • வைரஸ் காய்சலினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கடுமையான உடல் வலி, அரிப்புகள் மற்றும் தலைவலி ஆகிய பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.
  • சுவாச மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிப்பதுடன், தீவிரமான பல்வேறு பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.
வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிவை?
  • வைரஸ் காய்ச்சல் வந்தால், உடல் வறட்சி அடையும். அதனால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
  • ஓய்வு நன்கு எடுக்க வேண்டும். அதோடு எளிதில் செரிமானம் அடையும் உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு, வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு உள்ளவர்கள், தான் உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

  • வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க, அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும்.

  • பழ சாறுகள் மற்றும் இயற்கை வகை பானங்கள், கொத்தமல்லி டீ அல்லது நீர், வெந்தய தண்ணீர் மற்றும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்த கஞ்சி ஆகியவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்