வவுனியாவில் இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் பரீட்சைகள் ஆரம்பம்

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியாவில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

வவுனியா மாவட்டத்திலிலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணியளவிலேயே அதிகளவான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வவுனியா மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணை மறுப்பு தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்