எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் தொகுப்பாளினியை எச்சரித்த ரசிகர்கள்: கொடுத்த பதிலடி

Report Print Santhan in பொழுதுபோக்கு
248Shares
248Shares
lankasrimarket.com

எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நடிகை சங்கீதா க்ரிஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ் சேனல் ஒன்றில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஒருவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றின் போது அகதா, சுசனா மற்றும் சீதாலட்சுமி ஆகிய மூவரும் ஆர்யாவை திருமணம் செய்யும் களத்தில் இருந்தனர்.

ஆனால் ஆர்யாவோ யாரையும் தேர்ந்தேடுக்காமல் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இருவரும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நழுவிவிட்டார்.

ஆர்யாவின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்மின்றி ஆர்யாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா, எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இது எல்லாருக்குமே அதிர்ச்சியான விஷயம் என்பது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆர்யாவின் முடிவால் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டோம்.

ஆனால், ஏமாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, மன்னித்து விடுங்கள்.

மேலும் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் என்று எச்சரித்தவர்கள், உங்கள் வீட்டின் முகவரியையும், மொபைல் நம்பரையும் அனுப்புங்கள, நான் என் வீட்டின் மாதாந்திர பில்களை அனுப்புகிறேன், நீங்கள் கட்டிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்