பிரபல நடிகையின் குழந்தையை கவனித்து கொள்ள ஆயாவுக்கு சம்பளம் இவ்வளவா? பிரதமருக்கு சமம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சயிப் அலிகான் - நடிகை கரீனா கபூர் தம்பதியின் குழந்தை தய்முரை கவனித்து கொள்ளும் ஆயாவின் மாத சம்பளம் இந்திய பிரதமரின் சம்பளத்துக்கு சரிசமமாக இருப்பது தெரியவந்துள்ளது.

தய்முரை கவனித்து கொள்ளும் ஆயாவுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர் குறித்த நேரத்தை விட அதிக நேரம் பணியில் இருந்தால் அதிகபட்சமாக சம்பளம் ரூ.1.75 லட்சம் வரை தரப்படுகிறது.

இது இந்திய பிரதமரின் சம்பளத்துக்கு கிட்டத்தட்ட சரிசமமாக உள்ளது.

ஓவ்வொரு மணி நேரம் அதிகமாக ஆயா குழந்தையுடன் இருந்தால் அதற்கு தனி தொகை தரப்படுகிறது.

இதோடு குழந்தை தய்முரை அழைத்து கொண்டு அந்த பகுதியை சுற்றிவர ஒரு காரும் ஆயாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பிரபலமான ஏஜன்ஸி மூலம், குறித்த பெண்ணை தனது குழந்தைக்கு ஆயாவாக கரீனா கபூர் பணியில் அமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்