பகவத்கீதையை அவமதித்தேனா? நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பகவத்கீதையை அவமதித்ததாக விஜய் சேதுபதி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வரும் நிலையில், விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்து கூறியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில், செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்க தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது இந்த செயலி மூலம் காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி குறையும் என்று அவர் கூறினார். இதை பிரபல டிவி சேனல் பதிவிட்டது.

அதில் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக, பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை சிலர் போட்டோஷாப் மூலம் மாற்றி பரப்பியுள்ளனர்.

இந்த விடயம் சமூகவலைதள பக்கங்களில் விஜய் சேதுபதியின் கருத்து போல் வெளியானதால் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், அது தன்னுடைய கருத்து அல்ல என விஜய் சேதுபதி தற்போது விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.

எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers