நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட நடிகர் விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் நடிகரான விஷாலின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது.

முன்னணி தமிழ் நடிகர், நடிகர் சங்க பொதுச்செயலாளர், இயக்குனர்கள் சங்க தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தான் தன்னுடைய திருமணம் நடைபெறும் என முன்னமே அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆந்திரா நடிகை அனிஷா ரெட்டியை காதலிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். எப்பொழுது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெறும் என நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த சுந்தர் சி, குஷ்பு, மனோபாலா, குட்டிபத்மினி மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்