நடிகர் பார்த்திபன் மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமண: வைரலாகும் புகைப்படங்கள்!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் நடிகரான பார்த்திபனின் இரண்டாவது மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமாக வலம்வரும் பார்த்திபன் - சீதா தம்பதியினரின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் அபிநயாவுக்கும், பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகள் வழி பேரனுமான நரேஷ் கார்த்திக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இதில் நடிகர் ராதாரவி, பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவி, நடிகர் விஜயின் பெற்றோர், நடிகர் கார்த்தி மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்