வடிவேல் பாலாஜி மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தார்! எங்களுக்கும் இதே நிலைமை தான்... நடிகை அறந்தாங்கி நிஷா கண்ணீர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் வடிவேலு பாலாஜி பணப்பிரச்சனை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அவரின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, கடந்த 4, 5 மாதங்களாக வீட்டிலேயே இருந்தது வெறுப்பாக இருந்தது என பாலாஜி என்னிடம் கூறினார்.

அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், இதற்கு காரணம் கண்டிப்பாக பணம் தான். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பணம் கட்ட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டனர்.

எங்களை போன்ற கலைஞர்களுக்கு நிறைய கஷ்டம் உள்ளது.

பாலாஜி குடும்பத்துக்காக ஏதாவது பணம் சேர்த்து வைத்தாரா என தெரியவில்லை, அதுவே எனக்கு கவலையை கொடுக்கிறது.

பாலாஜி நன்றாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்.

ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார், பணம் இருந்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்றே கருதுகிறோம்.

எங்களுக்கும் இதே நிலைமை தான், இனி தான் வடிவேலு பாலாஜியின் மனைவி வாழ்க்கையில் போராட வேண்டியிருக்கும்.

அவருக்கு படிக்க கூட தெரியாது, ஆனாலும் அவரை பாலாஜி இவ்வளவு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வைத்திருந்தார், கடவுள் தான் அவரை பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்