மூன்று மகள்களுக்கு தந்தையான பிரபல திரைப்பட நடிகர் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் அஜித் தாஸ் தனது 71வயது வயதில் காலமானார்.

ஒடியா திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அஜித் தாஸ்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 1ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அஜித் தாஸ் உயிரிழந்தார், அவரின் மரணத்துக்கு சரியான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்னும் தெரிவிக்கவில்லை.

ஏனெனில் கொரோனா நோயாளிகளின் மரணம் தொடர்பிலான தகவலை அரசாங்கம் அல்லது அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும்.

உயிரிழந்த அஜித் தாஸுக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

அவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்