லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எந்த பிராந்தியத்தில் அதிகம்? முழு தகவல்

Report Print Santhan in ஐரோப்பா

உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், எந்த தலைநகர் மற்றும் பிராந்தியத்தில் அதிகம் பாதிப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் சீனாவின் வுஹானில் இருந்து பரவினாலும், தற்போது ஐரோப்பிய நாடுகள் தான் இந்த நோயிடம் இருந்து தப்பிப்பதற்கு போராடி வருகின்றன.

குறிப்பாக இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் படி, உலகம் முழுவதும் 416,686 கொரோனா வைரஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18,589 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாடுகளின் தலைநகர்ஙளில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இங்கிலாந்தில், தலைநகரம் நாட்டின் பிற பகுதிகளை விட பல வாரங்களாக கொரோனாவால் முன்னிலையில் உள்ளது. லண்டன் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களையும், இறப்புகளையும் பதிவு செய்கிறது.

இதேபோன்ற நிலை மற்ற நாடுகளில் இருக்கும் மாநிலங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக அங்கு மக்கள் தொகை மிகுந்த நகரமான நியூயார்க் மற்ற பகுதிகளை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டின் பிராந்தியம் மற்றும் தலைநகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசமாக பதிவு செய்யப்படுவதால், அதன் உண்மை எண்ணிக்கை தீர்மானிப்பது கடினமாக உள்ளது.

உதாரணமாக கூற வேண்டும் என்றால், பிரித்தானியாவில் இன்னும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இங்கிலாந்து பரவலாக சோதிக்காததால், தரவுகள் துல்லியமாக இல்லை.

நிச்சயமாக, ஒவ்வொரு மணிநேரத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும் தற்போதைய கணக்கின் படி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தலைநகர் மற்றும் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் தகவலை வெளியிட்டுள்ளது.

London (பிரித்தானியா)
 • மக்கள் தொகை : 8.9 மில்லியன்(மதிப்பிடப்பட்டுள்ளது)
 • பாதிக்கப்பட்டவர்கள் : 3,247 (மார்ச் 25-ஆம் திகதி படி)
 • இறந்தவர்கள் : 87
New York (அமெரிக்கா)
 • மக்கள் தொகை :8.4 மில்லியன்
 • பாதிக்கப்பட்டவர்கள்:25,000 (மார்ச் 24-ஆம் திகதி படி)
 • இறந்தவர்கள் : 183
Lombardy (இத்தாலி)
 • மக்கள் தொகை:10 million
 • பாதிக்கப்பட்டவர்கள்: 32,346 (மார்ச் 25-ஆம் திகதி படி)
 • இறந்தவர்கள் : 4,474
Madrid (ஸ்பெயின்)
 • மக்கள் தொகை: 6.5 மில்லியன்
 • பாதிக்கப்பட்டவர்கள்:12,352 (மார்ச் 24-ஆம் திகதி படி)
 • இறந்தவர்கள் : 1,535

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்