பிரித்தானியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்த பிரபல ஐரோப்பிய நாடு

Report Print Basu in ஐரோப்பா
493Shares

பிரித்தானியர்கள் நாட்டிற்குள் நுழைய மேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து தடை விதித்துள்ளது.

டிசம்பர் 31ம் தேதியோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிவிட்டது.

இதன் விளைவாக ஜனவரி 1 முதல் சுமார் 10 பேருக்கு நெதர்லாந்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

நெதர்லாந்தின் கொரோனா விதிப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் எவரும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அதிக ஆபத்துள்ள நாட்டிலிருந்து வருபவர்கள் மற்றும் நாட்டிற்குள் நுழைய அத்தியாவசிய காரணம் இல்லாதவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது, நெதர்லாந்து தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் பிரித்தானியாவும் அடங்கும்.

தடுத்து நிறுத்தப்பட்ட 10 பேரும் அத்தியாவசிய காரணமின்றி நுழைய விரும்பினர் என நெதர்லாந்து எல்லை பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.

அத்தியாவசிய தேவை இருக்கும்போது மட்டுமே நெதர்லாந்து மற்றும் ஷெங்கன் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க முடியும்.

தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் ஒருவர் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என கூறினார், மற்றொருவர் ஹாலந்துக்குச் செல்ல விரும்பினார். இவை அனைத்தும் அத்தியாவசிமற்ற பயணங்கள் என நெதர்லாந்து எல்லை பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்