1940-களில் தற்செயலாக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சமையலறை சாதனம் தான் மைக்ரோஓவன்.
மைக்ரோஓவனில் இல்லாத வீடு தற்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது.
மைக்ரோஓவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன.
அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது.
அதிலும் சில உணவுகளை எக்காரணம் கொண்டும் ஓவனில் சூடேற்றக்கூடாது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வேக வைத்த முட்டையை ஓவனில் வைத்து சூடேற்றும் போது, அதிகப்படியான அழுத்தத்தால், அந்த முட்டை ஓவனில் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
- கேரட்டை மைக்ரோஓவனில் சமைக்கவும், சூடேற்றவும் முடியும் என்றாலும், கேரட்டை தோல் நீக்காமல் ஓவனில் சமைப்பது சற்று ஆபத்தானவை. அதிலும் கேரட் சரியாக கழுவப்படாமல், அழுக்குகளின் எச்சத்துடன் இருந்தால், மண்ணில் உள்ள தாதுக்கள் ஓவனில் தீப்பொறிகளை ஏற்படுத்தக்கூடும்.
- பொதுவாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ஊட்டச்சத்துள்ள உணவு அல்ல. ஏனெனில் அதில் உப்பு, சுவையூட்டிகள், ரசாயனங்கள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் உள்ளன. அத்தகைய இறைச்சியை ஓவன் கதிர்வீச்சில் வைக்கும் போது, அதில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- மைக்ரோஓவனில் நீரை சூடேற்றுவது ஆபத்தாகும். மைக்ரோ ஓவனில் உள்ள மின்காந்த அலைகள் தண்ணீரை விரைவில் அதிகளவு சூடேற்றக்கூடும். இது நீர் மூலக்கூறுகளை நிலையற்றதாக்குகிறது மற்றும் தீவிரமான கொதிநிலையால் சில சமயங்களில் வெடிப்புக்களைக் கூட ஏற்படுத்தும்.
- மிளகாயில் உள்ள கேப்சைசின் மைக்ரோஓவனில் உள்ள மின்காந்த அலைகளில் வெளிப்படும் போது, அது அதிகளவு புகையை உண்டாக்க தொடங்கி, வேகமாக தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு மைக்ரோஓவனில் இருந்து வெளியேறும் தீ மற்றும் புகை, சரும எரிச்சல் மற்றும் எரிச்சலுணர்வையும் ஏற்படுத்தும்.
- சிக்கனை மைக்ரோஓவனில் சமைக்கும் போது, சிக்கன் சமமாகவும், முழுமையாகவும் சமைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் இது பாக்டீரியா மாசுபடுவதற்கான அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இது மற்ற இறைச்சிகளுக்கும் பொருந்தும்.
- வேக வைத்த முட்டையைப் போன்றே, தக்காளியும் மைக்ரோஓவனில் அதிக நேரம் இருந்தால், வெடித்துவிடும். எனவே தக்காளியை மைக்ரோ ஓவனில் வேக வைக்காதீர்கள்.