பிரான்சில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முன்னணி நிறுவனம் முடிவு

Report Print Raju Raju in பிரான்ஸ்
174Shares
174Shares
Seylon Bank Promotion

பிரான்ஸில் உள்ள கூகுள் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் செபஸ்டியன் மிஸ்ஸஃப் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் தலைவர் செபஸ்டின் மிஸ்ஸஃப் அளித்துள்ள பேட்டியில், அடுத்த வருடத்தின் இறுதிக்குள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை 700-லிருந்து 1000- ஆக உயர்த்தவுள்ளோம்.

முக்கியமாக பொறியாளர்களை அதிகம் பணிக்கு சேர்க்கவுள்ளோம். இதோடு எங்கள் அலுவலகத்தின் அளவை 10,000-லிருந்து 20,000 சதுர மீட்டராக உயர்த்தவும் முடிவெடுத்துள்ளோம்.

மின்னணு முறையில் வர்த்தக பரிவர்த்தனைகள் பிரான்ஸில் மிக குறைவாக உள்ளது. நாட்டின் 16% நிறுவனங்கள் மட்டுமே மின்வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. இதை அதிகரிக்கவே இவ்வாறு செய்யவுள்ளோம்.

மற்ற நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு மின்னணு திறனை அதிகரிக்க வேண்டும். இதற்கு கூகுள் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்