நெப்போலியன் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க இலை ஏலம்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தார் பயன்படுத்திய வேளைப்பாடு நிறைந்த 400 பொருட்கள் நேற்று(20-11-2017) பிரான்ஸ் நாட்டின் ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இதில் நெப்போலியன் பயன்படுத்திய கிரீடத்தில் இருந்த தங்கஇலை 100,000 முதல் 150,000 யூரோக்கள் வரை விலை போகும் என கணிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததை விட 625,000 யூரோக்களுக்கு ஏலம் போனது.

கிரீடத்திலிருந்து ஆறு இலைகள் பிரித்தெடுக்கப்பட்டு, பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு இலை மட்டும் ஏலத்தில் விடப்படுள்ளது.

மற்ற இலைகள் மார்டீனின் மகள்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்