பிரான்ஸ் சர்க்கஸில் வனவிலங்குகள் பயன்படுத்த தடை? கோரிக்கை வலுக்கிறது

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
66Shares
66Shares
lankasrimarket.com

பிரான்ஸில் சர்க்கஸ் புலி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வனவிலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்த தடைவிதிக்கும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

பிரான்ஸின் பாரிஸில் Cirque Bormann-Moreno என்ற சர்க்கஸிலிருந்து தப்பிய புலி சாலையில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

இதனை கண்டு மக்கள் பீதியடைந்ததை தொடர்ந்து அதன் உரிமையாளரே அதை சுட்டுக்கொன்றார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து பல்வேறு தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர், விலங்கு நல அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதுகுறித்து தனக்கு கொலை மிரட்டல் கூட வந்ததாக சர்க்கஸ் உரிமையாளர் Eric Bormann தெரிவித்திருந்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து Brigitte Bardot Foundation-ன் செய்தி தொடர்பாளார் Christophe Marie கூறுகையில், வெள்ளியன்று நடைபெற்ற இந்த சம்பவம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளுக்கு சர்க்கஸில் சுதந்திரம் இருப்பதில்லை, ஒரே வேலையை தினமும் செய்வதால் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகுகின்றன, மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அமைப்பு சுற்றுச்சூழல் அமைச்சர் Nicolas Hulot-டம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே 13 நாடுகளுக்கு விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்த தடை விதித்துள்ளதை போன்று பிரான்ஸிலும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்