முதியவர்களை ஒதுக்கும் பிரான்ஸ்: சமீபத்திய ஆய்வு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சமீபத்திய ஆய்வு ஒன்று பிரான்ஸ் நாடு முதியவர்களை ஒதுக்குவதாகவும் ஓரங்கட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

சிறந்த வாழ்க்கைத்தரமும் மிகச்சிறந்த மருத்துவ வசதிகளும் பிரான்சுக்கு முதுமையை அனுபவிக்க சிறந்த நாடு என்னும் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று பிரான்சில் முதியவர்கள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என்னும் அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளது.

பிரான்சின் National Ethics Committee மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் பிரான்சில் முதுமை அடைதல் என்பது சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுதல், முதியவர்களும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களும் துயருறுதல் என்று பொருளாகும் என்று தெரிவிக்கின்றன.

பிரான்சில் 75 வயதைத் தாண்டியவர்கள் 6.1 மில்லியன்பேர் இருக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம்பேர் பெண்கள்.

இவர்களில் 25 சதவிகிதம்பேர் தனியாக வாழ்கிறார்கள், 50 சதவிகிதம்பேருக்கு நண்பர்கள் இல்லை, 41 சதவிகிதம்பேருக்கு தங்கள் பிள்ளைகளுடன் தொடர்பே இல்லை.

5 லட்சம் முதல் 6 லட்சம்பேரைக் கொண்ட 7000 நர்ஸிங் ஹோம்கள் இந்த நாட்டில் உள்ளன, அதில் தங்குபவர்களில் 70 சதவிகிதம்பேர் தங்கள் தனித்தன்மையை இழந்து தவிக்கிறார்கள் என்கிறார் தீவிர நோயியல் பேராசிரியரான Régis Aubry.

நர்ஸிங் ஹோம்களில் தங்குபவர்களில் முக்கால்வாசிப்பேர் அதை விரும்பவில்லை என்றும் மற்ற முதியவர்களுடன் தங்குவதையும் அவர்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே அவர்களில் 40 சதவிகிதம்பேர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Jérôme Pellissier என்னும் முதியோருக்கான மனோவியல் நிபுணர் ”நமது சமுதாயம் மக்களில் பெரும்பான்மையோரை தாங்கள் ஒரு சுமை என்பதுபோல எண்ணச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆய்வு ஒன்று பிரான்ஸ், தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் முதியோருக்கான படுக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் அவர்களை அவர்களது வீடுகளிலேயே கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக

முதியவர்களுக்கு உதவும் கருவிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

2014 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் பிரான்சைவிட முதியோருக்கு நல்ல வாழ்க்கைத் தரம் உள்ளதாகத் தெரிவிக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...