90 பேரை பலிகொண்ட தீவிரவாத தாக்குதலில் வேடிக்கை பார்த்த ராணுவம்: தொடரும் சர்ச்சை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
219Shares
219Shares
lankasrimarket.com

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் பாரீஸிலுள்ள Bataclan தியேட்டரில் தீவிரவாத தாக்குதல் நடந்தது.

இதன்போது தியேட்டருக்கு வெளியே நின்றிருந்த ராணுவப்படைகள் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது ஏன் என கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும், சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களும் சட்ட ரீதியாக புகார் ஒன்றை அளிக்க உள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Bataclan தாக்குதலின்போது வெளியே எட்டு படைகள் நின்ற போதும், சம்பவத்தில் தலையிடாமல் இருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது ஏன் என சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னும் பாதிகாப்பட்டவர்களுக்கு புரியவில்லை எனக் கூறும் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவரான Samia Maktouf, கூறியுள்ளார்.

அவர்கள் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாததோடு, முதலுதவி செய்யும் பொலிசாருக்கு உதவியாக மருத்துவ உபகரணங்கள் வழங்குவதும் தடுக்கப்பட்டது.

அவர்கள் அந்த உபகரணங்களை அளித்திருந்தால் பெருமளவில் இரத்தம் வெளியேறியதால் உயிரிழந்த பலரைக் காப்பாற்றியிருக்கலாம்.

90 பேரின் உயிரைப் பறித்த அந்த தாக்குதல் நடந்த இடத்திற்கு முதலில் வந்தது பாதுகாப்புப் படையினர்தான்.

ஆனால் அவர்கள் எந்த செயலிலும் ஈடுபடாமல் இருக்க கட்டளையிடப்பட்டார்கள். நாடாளுமன்ற விசாரணை ஒன்றின்போது சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தான் கட்டிடத்திற்குள்ளே சென்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டுகோள் விடுத்ததாகவும் பாரீஸ் பொலிசார், நீங்கள் ஒன்றும் போர்க்களத்தில் இல்லை, ராணுவம் தலையிட வேண்டாம் என்று தனக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு தடுத்தவர்கள் மீதுதான் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சட்ட ரீதியான புகார் அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்