பிரான்சில் சீன முதியவரை தாக்கி கொள்ளை: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

சீனாவை பூர்வீகமாக கொண்ட முதியவர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து 3,000 யூரோக்களை கொள்ளையிட்டுச் சென்ற இளைஞருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாரிஸின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள Vitry-sur-Seine நகராட்சியில் குறித்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி, குறித்த 64 வயதுடைய ஓய்வூதியம் பெறும் நபர், Vitry-sur-Seine பகுதியில் குதிரைப்பந்தையம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

அவரை அணுகிய 20 வயது இளைஞர் கடுமையாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த 3,000 யூரோக்களை கொள்ளையிட்டுள்ளான். குறித்த முதியவர் 2,500 யூரோக்களுடன் வந்து குதிரைப்பந்தயத்தில் இருந்து 3,000 யூரோகளாக பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரோடு மேலும் ஒருவர் சேர்ந்துகொண்டு தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தெருவோரம் குற்றுயிராக கிடந்த முதியவரை மீட்டு அதுவழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, 'சீனர்களிடம் மிக எளிதில் கொள்ளையிடலாம். நன்றாக ஆடை அணிந்த சீனர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும்' என அவன் தெரிவித்ததாகவும், இதில் இனவாதம் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை தாக்கிய இளைருக்கு வியாழனன்று 18 மாத சிறைத் தண்டனையை Creteil நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் இக்கொள்ளையில் ஈடுபட்ட இரண்டாம் இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர். குறித்த நபர தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers