200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறிய பிரான்ஸ் நாட்டவர்: திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

56 வயதான Alain, 1999ஆம் ஆண்டு, சிகாகோவிலுள்ள, தற்போது வில்லிஸ் கோபுரம் என்று அழைக்கப்படும் சியர்ஸ் கோபுரத்தில் ஏறியதையடுத்து அவருக்கு பிரான்சின் ஸ்பைடர்மேன் என்னும் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது.

நேற்று அவர் மணிலாவிலுள்ள 47 மாடிக் கட்டிடம் ஒன்றில் எந்த உபகரணங்களின் உதவியுமின்றி ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த கட்டிடத்தில் ஏறி இறங்கியதும் தயாராக இருந்த பொலிசார் அவரைக் கைது செய்து பொலிஸ் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர்.

11 வயதாக இருக்கும்போது கட்டிடங்களில் கயிறு முதலான எந்த உபகரணங்களின் உதவியுமின்றி ஏறத்தொடங்கிய Alain, உலகம் முழுவதிலுமுள்ள 150க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார்.

அவற்றில் உலகின் உயரமான கட்டிடமாகிய துபாயின் புஜ் கலீபா, ஈபிள் கோபுரம் மற்றும் சிட்னியின் ஓபரா ஹவுஸ் ஆகியவை அடங்கும்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers