பாலியல் குற்றச்சாட்டில் பொலிசாரை சிறைக்கு அனுப்பிய சுற்றுலாப்பயணிக்கு குவியும் பாராட்டுகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் பொலிசாரால் பாலியல் கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட கனடாவை சேர்ந்த சுற்றுலாப்பயணி தைரியமாக நீதிமன்றத்திற்கு சென்று அவர்களை சிறைக்கு அனுப்பியதற்கு, பிரான்சில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதைப்போல, பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நபர் மீதான அணுகுமுறை மாறியிருப்பதைப்போலவே, பாதிக்கப்பட்டவர்கள் மறைந்திருக்காமல் நீதி கோரும் அணுகுமுறையும் மாறியிருக்கிறது.

இதற்கு உதாரணமாக அதிகரித்திருக்கும் பாலியல் வன்முறை புகார்களைக் கூறலாம். 2018ஆம் ஆண்டில் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட பாலியல் வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

பாலியல் வல்லுறவு புகார்கள் 17 சதவிகிதம், பாலியல் தொடர்பான தாக்குதல்கள் குறித்த புகார்கள் 20 சதவிகிதமும் கடந்த ஆண்டு அதிகரித்திருக்கின்றன.

2016இல் பாதிக்கப்பட்ட பெண்களில் பத்தில் ஒருவர் மட்டுமே புகாரளிக்க முன்வந்த நிலையில், 2017-ல் அது மூன்று மடங்காக அதிகரித்தது.

மிக அதிக அளவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டவர்கள் புகாரளித்தது 2017இல், பின்னர் 2018-லும் அது தொடர்ந்தது.

இந்த அறிக்கை பெண் உரிமை அமைப்புகளால் பெரிய அளவில் பாராட்டப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறை குறித்த புகார்கள் அதிகரிப்பது, சமுதாயம் மாறுவதைக் காட்டுகிறது என்கிறார்கள் அவர்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers