மஞ்சள் மேலாடை போராட்டத்தினால் பிரான்சில் ஏற்பட்ட பாதிப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டத்தினால் பல உணவகங்கள், தங்குமிடங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மஞ்சள் மேலாடை போராட்டம் காரணமாக, பிரான்சில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்ஸ் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகளை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் பாரிசில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

இதன் காரணமாக பிரான்சில் உள்ள பல சுற்றுலாத்தளங்கள் உட்பட உணவகங்கள், தங்குமிடங்கள் பெருத்த வருவாயை ஈட்டியது. ஆனால், தற்போது மஞ்சள் மேலாடை நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 சதவிதத்தில் இருந்து 40 சதவிதம் வரை குறைந்துள்ளது.

எனவே, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மஞ்சள் மேலாடை போராட்டம், இந்த வருவாயில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, சனிக்கிழமைகளில் மிக மிக குறைவான வருகையே உள்ளதாகவும், முன்பதிவு செய்யப்பட்டிருந்தவை அனைத்தும் மூன்று மாதங்களுக்கு பின்னர் தள்ளி வைக்கப்பட்டிருந்தன, பின்னர் அவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த நிலை தொடர்வதாக பாரிசின் தங்குமிட உரிமையாளர் Alejandro Duran-Ezquierdo தெரிவித்துள்ளார். பிரான்சுக்கு வருகை தரும் சீன பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக சுற்றுலாப் பயணிகளை சந்தித்த நாடாக பிரான்ஸ் இருந்ததும், 2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அது தகர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்