பிரான்சில் இன்று சில வாகனங்களுக்கு அதிரடி தடை... போக்குவரத்தில் முக்கிய மாற்றம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் இந்த வாரம் கடும் வெப்பம் காரணமாக, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Airparif என்ற நிறுவனம் வழங்கிய தகவலின் படி, இன்று ஒரு கன மீற்றருக்கு 180 மைக்ரோ கிராம் அளவு மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது 120 கிராம் எனும் அளவினை மீறாமல் இருப்பதே அரோக்கியமான சுற்றுச்சூழல் என குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று பரிசுக்குள் நுழைய காலை முதல் பலதரப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 5:30 மணியில் இருந்து அன்றைய நாளின் நள்ளிரவு வரை என்று கூறப்படுகிறது. மேலும் Crit'air ஒட்டிகளில், வகை 0, வகை 1, வகை 2 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே பாரிசில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மற்ற எந்த வாகனங்களுக்கும் பரிசுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாதரணமாக வழக்கமாக இருக்கும் வேகத்தில் 20 கி.மீற்றர் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 70 கி.மீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் 50 கி.மீற்றர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்