பிரான்ஸ் தாக்குதல்தாரியை விரட்டிச்சென்று மடக்கி பிடித்த ஹீரோ: வெளியான திகில் வீடியோக்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸின் லியோன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் மற்றும் அவன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

லியோன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். 9 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பிரான்ஸில் புகலிடம் கோரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 33 வயதான சுல்தான் மார்மட் நியாஸி என்ற நபர் இத்தாக்தலில் ஈடுபட்டுள்ளார். சமையலறை கத்தி மற்றும் முற்கரண்டியை தாக்குதலுக்காக பயன்படுத்தியுள்ளார்.

சம்பவயிடத்தில் இருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் என நான்கு பேர், தாக்குதாரியை விரட்டிச் சென்று எதிர்கொண்டு அவனை சரணடையும் படி வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து, சுல்தான் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்துள்ளார்.

“அவர்கள் குரானைப் படிப்பதில்லை” என்ற கத்திக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவயிடத்திலிருந்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுல்தான், தாக்குதல் நடத்தியதற்காக மூன்று காரணங்களை தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், அவை தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது தீவிரவாத தாக்குதல் என்ற எந்த அறிகுறியும் இல்லை என பொலிசார் கூறியுள்ளனர். அதேசமயம், ஒரே ஒரு நபர் தான் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்